Latestமலேசியா

அனைத்துலக இணைய மோசடிக் கும்பல் முறியடிப்பு – ரி.ம 57.68 மில்லியன் சொத்து பறிமுதல்

கோலாலம்பூர் -கிள்ளான் பள்ளத்தாக்கை சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்புகளில் இணையம் வாயிலாக செயல்பட்டு வந்த அனைத்துலக மோசடிக் கும்பலை போலீசார் முறியடித்தனர்.

இம்மாதம் 6 மற்றும் 7 ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது அக்கும்பல் முறியடிக்கப்பட்டதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டத்தோஸ்ரீ முகமட் காலிட் இஸ்மாயில் ( Mohd Khalid Ismail ) தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையின்போது 187 நபர்கள் கைது செய்யப்பட்டதோடு 57.68 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டன.

புக்கிட் அமான் வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறை, புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறை, சிறப்புப் பிரிவு, பணமோசடி தடுப்புப் பிரிவு , மலேசிய இணைய பாதுகாப்பு, டெலிகோம் மலேசியா ஆகியவற்றின் ஒத்துழைப்போடு இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக இன்று புக்கிட் அமானில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் முகமட் காலிட் தெரிவித்தார்.

உள்ளூர் மற்றும் வெளிநாட்டு குடிமக்களை இலக்காகக் கொண்ட தொலைபேசி அழைப்பு மையச் செயல்பாடுகள், பங்கு முதலீட்டு மோசடி, நிதி மோசடிகள் மற்றும் எல்லை தாண்டிய வணிகக் குற்றங்கள் ஆகியவற்றில் இந்த சோதனையின்போது கவனம் செலுத்தப்பட்டது.

இந்த நடவடிக்கை முழுவதும், கிள்ளான் பள்ளத்தாக்கைச் சுற்றியுள்ள ஆடம்பர அடுக்குமாடிக் குடியிருப்புகள் உள்ளிட்ட பல குடியிருப்பு வளாகங்களில் மொத்தம் 46 சோதனைகள் நடத்தப்பட்ட தகவலையும் ஐ.ஜி.பி வெளியிட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!