Latestஉலகம்

ஈரான் போர்நிறுத்தம்: ‘உயிர் காக்கும் நிலையில்’ இருப்பதாக ட்ரம்ப் எச்சரிக்கை

வாஷிங்டன், மே-15-மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றம் புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

ஈரானுடனான ஒரு மாத கால போர்நிறுத்தம் தற்போது life support அதாவது ‘உயிர் காக்கும் நிலையில்’ இருப்பதாக அதிபர் டோனல்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

ஈரான் சமர்ப்பித்த அமைதிப் பேச்சுவார்த்தைக்கான புதிய ஆவணத்தை ‘குப்பை’ என்று கூறி நிராகரித்த ட்ரம்ப், ஈரானின் அணுகுமுறை மிகவும் பலவீனமாக இருப்பதாகக் குற்றம் சாட்டினார்.

அணுசக்தி தொடர்பான அமெரிக்காவின் கோரிக்கைகளை ஈரான் ஏற்காததே இந்த விரிசலுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது.

இந்த மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்ந்துள்ளது.

Hormuz நீரிணையை ஈரான் முடக்கி வைத்துள்ள நிலையில், அமெரிக்காவும் ஈரான் துறைமுகங்களுக்கு கடும் தடையை விதித்துள்ளது.

இதன் பாதிப்பை குறைக்க, கூட்டரசு எரிவாயு வரியை தற்காலிகமாக நீக்க ட்ரம்ப் பரிந்துரைத்துள்ளார்.

இந்தச் சூழலில், ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் முயற்சியாக சீன அதிபர் சீ சின் பிங்கைச் சந்திக்க ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார்.

இரு தரப்புமே பிடிவாதம் காட்டுவதால் போர்நிறுத்தம் நீடிக்க வெறும் ‘ஒரு விழுக்காட்டு வாய்ப்பு’ மட்டுமே உள்ளதாகக் கூறப்படுவதால், உலக நாடுகள் பெரும் அச்சத்தில் உள்ளன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!