Latestமலேசியா

ஊடக சுதந்திரத்திற்கு உத்தரவாதம் உண்டு, ஆனால் அதனை பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்தாதீர் – பிரதமர் வரியுறுத்து

கோலாலாம்பூர், ஜூன் 8 –  இந்நாட்டில் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஆனால் அந்த சுதந்திரத்தை பயன்படுத்தி நாட்டில் பிளவையும் ஐக்கியததையும் சீர்குலைத்துவிடக்கூடாது .குறிப்பாக மன்னர், சமயம் மற்றும் மக்கள் ஆகிய 3R அம்சங்களுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் ஊடக சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தக்கூடாது என அவர் கேட்டுக்கொண்டார். குறைகூறல்கள் மற்றும் கருத்து சுதந்திரத்தை வெளிப்படுத்துவதற்கான ஊடகங்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்திற்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவாக உள்ளது. நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பிருந்தே இந்த உணர்வு இருந்து வந்துள்ளதை அன்வார் சுட்டிக்காட்டினார்.

ஊடகவியலாளர்களின் சுதந்திரம் மற்றும் அவர்களை கட்டுப்படுத்துவதற்கு எனது பதவியையோ அல்லது அமைச்சரவையில் உள்ள தமது சகாக்களோ ஊடகவியலாளர்களின் சுதந்திரம், கருத்துக்கள் மற்றும் குறைகூறல்களை சுட்டிக்காட்டுவதை கட்டுப்படுத்தமாட்டோம் என அவர் கூறினார். நாட்டின் பாதுகாப்பு, தேச உணர்வின் சித்தாந்தம் , இனவாதம் மற்றும் சமய தீவிரவாதிகள் விவகாரங்களை கையாள்வதில் அரசாங்கம் கடுமையான போக்கை கொண்டிருந்தாலும் ஊடகத்திற்கான சுதந்திர உணர்வுக்கான உத்தரவாதம் இருப்பதாக அன்வார் தெரிவித்தார். மக்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சமய விவகாரங்களை பயன்படுத்தி நாட்டை பிளவுபடுத்துவதையும் சீர்குலைப்பதையும் அனுமதிக்க முடியாது என நேற்றிரவு 2023 ஆம் ஆண்டின் MPI – பெட்ரோனாஸ் மலேசியா விருதளிப்பு வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அன்வார் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் நாட்டின் ஊடகவியலாளர்கள் பலர் தங்களின் பல்வேறு தரமான செய்தி படைப்புகளுக்காக விருதுகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!