Latestமலேசியா

டாங் வாங்கி முன்னாள் போலீஸ் தலைவரை தாக்கிய ஆடவனுக்கு 100 மணி நேர சமூக சேவை உத்தரவு

கோலாலம்பூர், பிப் 4 -Kampung Sungai Baru சம்பவத்தின்போது டாங் வாங்கி முன்னாள் போலீஸ் Senior Asisten Komisioner சுலிஷ்மி எப்பெண்டி சுலைமானை ( Sulizmie Affendy Sulaiman) தாக்கி காயப்படுத்திய 16 வயது பையனுக்கு 100 மணி நேரம் சமூக சேவை செய்யும்படி இன்று மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.

மாஜிஸ்திரேட் நுர்பராஹைய்ன் ரோஸ்லான் ( Nurfarahain Roslan) முன்னிலையில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்குப் பின் வயதுக் குறைந்த அந்த பையனுக்காக ஆஜரான வழக்கறிஞர் முகமட் நஜிப் அகமட் (Muhammad Najib Ahmad)இதனை தெரிவித்தார்.

அந்த 100 மணி நேர சமூக சேவை ஆறு மாதத்திற்குள் சமூக நலத்துறையின் கண்காணிப்போடு எந்த நேரத்திலும் நிறைவேற்றப்பட வேண்டும்.

குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எச்சரிக்கையாக சமூக சேவை செய்யும் தண்டனையை விதிக்கும்படி அவனது சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நீதிமன்றத்தை கேட்டுக் கொண்டதைத் தொடர்ந்து இந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அரசு அதிகாரியாக தனது கடமைகளைச் செய்யும்போது சுலிஷ்மியை மிரட்டுவதற்காக வேண்டுமென்றே காயம் ஏற்படுத்தியதாக அந்த பதின்ம வயது பையன் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த ஆண்டு செப்டம்பர் 11 ஆம்தேதி காலை மணி 10.50க்கும் காலை மணி 11.14 க்குமிடையே கோலாலம்பூர் கம்போங் சுங்கை பாருவிலுள்ள ஜாலான் அப்துல் மாலேக்கில் அவன் இக்குற்றத்தை புரிந்ததாக கூறப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!