Latestமலேசியா

கார் இருக்கையில் சிறுநீர் கழித்து சென்ற பெண் பயணியால் e – ஹெயிலிங் ஓட்டுனர் அதிர்ச்சி

கோலாலம்பூர், ஏப் 4 – e-hailing வாடகை கார் ஓட்டுனர்கள் ஒவ்வொரு நாளும் தங்களது தினசரி பணியின்போது பயணிகளிடம் இருந்து பல்வேறு சவால்களை சந்திக்க வேண்டியுள்ளது. சில பயணிகள் தாங்கள் செல்ல வேண்டிய இடம் வந்தவுடன் உறுதியளித்தபடி அதற்கான கட்டணத்தை செலுத்தாமல் குறைந்த கட்டணத்தை செலுத்துவது மற்றும் கட்டணம் தொடர்பாக ஓட்டுனர்களிடம் தகராறில் ஈடுபடும் சம்பவம் தினசரி நடைபெற்று வருகின்றன. ஆகக்கடைசியாக e- ஹெய்லிங் சேவையை பயன்படுத்திய பெண் பயணி ஒருவர் அக்காரிலிருந்து இறங்கி செல்வதற்கு முன் பின் இருக்கையில் சிறுநீர் கழித்துவிட்டு சென்ற சம்பவம் அக்கார் ஓட்டுனருக்கு பெரும் அதிர்ச்சியையும் முகம் சுழிக்கவும் செய்திருப்பதாக சமூக வலைத்தலளங்களில் காணொளியாக ரைவலாகியுள்ளது.

தனது காரில் ஏறிய மலேசிய பெண் ஒருவர் அதற்கான 25 ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும் என்பதை அதன் ஓட்டுனர் தெரிவித்திருக்கிறார். எனினும் கட்டணத்தை குறைக்கும்படி காரில் ஏறியது முதல் அப்பெண் தொடர்ந்து கோரிக்கையை எழுப்பி வந்துள்ளார். தாம் சென்றடைய வேண்டிய இடம் வந்தவுடன் அந்த ஓட்டுனர் தனது வாகனத்திற்காக வாடகை கட்டணத்தை அந்த பெண்ணிடம் கேட்டுள்ளார். ஏற்கனவே அந்த பெண் இதர வாகன ஓட்டுனர்களிடம் முழு தொகையை கொடுக்காமல் இறங்கி சென்றுள்ள தகவலலையும் சமூக வலைத்தளங்களில் அறிந்த ஓட்டுனர் வாக்குறுதி அளித்தபடி கட்டணத்தை செலுத்தும்படி வலியுறுத்தியுள்ளார். தம்மிடம் 10 ரிங்கிட் மட்டுமே இருப்பதாகவும் எஞ்சிய 15 ரிங்கிட் பணத்தை QR Code பயன்படுத்தி செலுத்திவிடுவதாக ஓட்டுனரிடம் அப்பெண் வாக்குறுதி அளித்துள்ளார். இதற்கு மறுப்பு தெரிவித்த ஓட்டுனர் முழு தொகையையும் செலுத்தும்படி அப்பெண்ணை கட்டாயப்படுத்தியுள்ளார். நீண்ட விவாதத்திற்குப் பின் அந்த பயணி முழு கட்டணத்தையும் செலுத்திவிட்டு இறங்கி சென்றுள்ளார். . ஆனால் அந்த பெண் காரிலிருந்து இறங்கி செல்வதற்கு முன் பின் இருக்கையில் சிறுநீர் கழித்திருப்பதை அறிந்து ஓட்டுனர் பெரும் வேதனைக்கு உள்ளானாதோடு இதனால் தமது காரை தூய்மைப்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கும் உள்ளானார். இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!