Latestமலேசியா

காஸாவில் இஸ்ரேலின் மனிதாபிமானமற்ற தாக்குதல் மலேசியா கடுமையாக சாடியது

கோலாலம்பூர், மே 28 – காஸாவில் இஸ்ரேல் தொடர்ந்து மேற்கொண்டுவரும் மனிதாபிமானமற்ற வான் தாக்குதலை மலேசியா கடுமையாக சாடியதோடு அதற்கு கண்டணம் தெரிவித்திருக்கிறது. இஸ்ரேலின் தாக்குதலை தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய நடவடிக்கை தேவையென வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் கேட்டுக் கொண்டது. பாலஸ்தீனர்களுக்கு எதிரான அந்த தாக்குதல்கள் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான சிவிலியன்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தியுள்ளதாகவும் மலேசியா சுட்டிக்காட்டியது.

கடந்த 24 மணி நேரத்தில Tal as Sultan, Jablia, Nuseirat மற்றும் காஸா நகரத்தில் இஸ்ரேல் படைகள் நடத்திய தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட சிவிலியன்கள் உயிரிழந்ததாக விஸ்மான புத்ரா வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. கடந்த 234 நாட்களாக இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலில் 35,984 பாலஸ்தீனர்கள் , குறிப்பாக பெண்கள், சிறார்கள் உயிரிழந்ததோடு அதிமானோர் காயம் அடைந்தனர். மேலும் மனிதாபிமான நெருக்கடிக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்றும் மலேசியா கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!