Latestமலேசியா

குழந்தையை ஆபத்துக்குள்ளாக்கி உயிரிழக்கக் காரணமானதை ஒப்புக் கொண்ட தம்பதியர்

ஜோகூர் பாரு, ஆகஸ்ட்.14-தங்கள் பராமரிப்பில் இருந்த மூன்று மாத ஆண் குழந்தையைக் காயப்படுத்தி அக்குழந்தை உயிரிழக்கக் காரணமாக இருந்த குற்றத்தை தம்பதியர் ஒருவர் ஜோகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டனர்.

ஜூலை 29 ஆம் தேதி பிற்பகல் சுமார் 1.03 மணியளவில் Jalan Cendanaவில் உள்ள ஒரு வீட்டில் அச்சம்பவம் நிகழ்ந்தது. தொழிற்சாலை ஊழியரான 36 வயது Mohd Iqbal Hassan, அவரது 34 வயது மனைவி Noraiayana Abd Samad நோர்சியானா ஆகியோர் மீது தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்டது.

2001-ஆம் ஆண்டு குழந்தைகள் சட்டம் மற்றும் தண்டனைச் சட்டங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர்களுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் அபராதம் அல்லது அவை இரண்டுமே விதிக்கப்படலாம்.

ஒவ்வொருவருக்கும் 25,000 ரிங்கிட் பிணைத் தொகை விதிக்கக் கேட்டுக் கொள்ளப்பட்டது. காவல் நிலையத்தில் ஆஜராவது, பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் அல்லது சாட்சிகளைத் தொடர்பு கொள்ளாமல் இருப்பது, கடப்பிதழ்களை நீதிமன்றத்தில் ஒப்படைப்பது உள்ளிட்ட கூடுதல் நிபந்தனைகளை விதிக்கவும் வலியுறுத்தப்பட்டது.

எனினும் தம்பதியினர் தங்களது நான்கு வயது குழந்தையை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், குறைந்த பிணைத் தொகையை விதிக்குமாறு அவர்களது வழக்கறிஞர் கோரினார்.

இறுதியில் கூடுதல் நிபந்தனைகளுடன் ஒவ்வொருவருக்கும் 7,000 ரிங்கிட் பிணைத் தொகை நிர்ணயிக்கப்பட்டது. அவ்வழக்கு மீண்டும் செப்டம்பர் 17 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!