Latestமலேசியா

கூட்டரசு அரசாங்கத்தின் பங்காளியாக ஜோகூர் கருதப்பட வேண்டும்; கூறுகிறார் TMJ

கோலாலம்பூர், ஜூன் 10 – கூட்டரசு அரசாங்கத்தின் பங்காளியாக ஜோகூர் கருதப்பட வேண்டுமென, அதன் ஆட்சியாளர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் (Tunku Ismail Sultan Ibrahim) கேட்டுக் கொண்டுள்ளார்.

அதற்காக, கூட்டாட்சி முறை, சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும்.

அதோடு, மாநில நலன்களுக்கு உத்தரவாதம் அளிக்க, ஜோகூரிலுள்ள அரசியல் கட்சிகள் “காபுங்கான் பங்சா ஜோகூர்” (Gabungan Bangsa Johor) என அழைக்கப்படும் ஒரு கூட்டணியில் ஒன்றுபட வேண்டுமெனவும் TMJ பரிந்துரைத்துள்ளார்.

சரவாக் ஆளும் கூட்டணியான “காபுங்கான் பார்ட்டி சர்வாக்” (Gabungan Parti Sarawak), அம்மாநிலத்திலுள்ள பல அரசியல் கட்சிகளின் கூட்டணியில் உருவானது.

அதன் வாயிலாக, கூட்டரசு அரசாங்கத்துடன், திறம்பட பேச்சு வார்த்தை நடத்த, மாநில அரசாங்கம் அதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதையும் TMJ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒன்றிணைந்து ஒரே அணியாக செயல்பட்டால், மத்திய அரசாங்கத்தால், நமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் இருக்க முடியாது. நமது தேவைகளை முடிவு செய்யும் அதிகாரமும் நம்மிடமே இருக்கும் என்பதையும் TMJ தெளிவுப்படுத்தினார்.

ஜோகூர் அதன் உரிமைகளை பெற வேண்டும். எவ்வளவு காலம் தான் ஜோகூர் “பிச்சை” எடுக்க முடியும்? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

முகநூல் “போட்காஸ்” (Podcast) நேரலையில் TMJ, அவ்வாறு கூறியுள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!