Latestமலேசியா

கெடாவில் தாம் கொள்ளையிட முயன்ற காராலேயே மோதப்பட்டு ஆடவன் மரணம்

அலோர் ஸ்டார், மார்ச்-20 கெடா, அலோர் ஸ்டாரில் தான் கொள்ளையிட முயன்ற காராலேயே மோதப்பட்டு ஆடவன் ஒருவன் உயிரிழந்தான்.

செவ்வாய்க் கிழமை காலை 6.40 மணி வாக்கில் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மூன்று ஆடவர்கள் மருந்தகம் ஒன்றின் முன்புறம் இருந்த காரைக் கொள்ளையிட முயன்ற போது அச்சம்பவம் நிகழ்ந்தது.

அவர்களில் ஒருவன் காரின் முன்பக்க கண்ணாடியை ஆயுதத்தால் உடைக்க, காரோட்டி பயத்தில் accelerator-ரை அழுத்தியிருக்கிறார்.

அங்கிருந்து தப்பிக்கும் முயற்சியில் காரை வேகமாகச் செலுத்த, முன்னே காரை தடுத்து நிறுத்த முயன்ற மோட்டார் சைக்கிளை அவர் மோதினார்.

அதில் அந்த மோட்டார் சைக்கிளோட்டி அங்கேயே மாண்ட வேளை, அவனின் இரு சகாக்களும் அங்கிருந்து தலைத்தெறிக்க ஒட்டம் பிடித்தனர்.

தப்பிய இருவரையும் தேடி பிடிக்கும் நடவடிக்கையில் போலீஸ் இறங்கியுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!