Latestமலேசியா

கெடா புக்கிட் காயூ ஈத்தாமில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

குபாங் பாசு, ஆகஸ்ட்-5,கெடாவில் 9 வயது சிறுவன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயமானது தொடர்பாக புக்கிட் காயு ஹீத்தாம் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

​36 வயதான Siti Zulaikha Ahmad Sabri, அவரது 39 வயது கணவர் Khairul Azhar Ahmad மற்றும் அவர்களின் மகன் Adid ஆகிய மூவரே மாயமாகியுள்ளனர்.

​ஜூலை 20 முதல் குடும்பத்தினரைத் தொடர்புகொள்ள முடியவில்லை என்றும், சிறுவன் பள்ளிக்கு வரவில்லை என்பதை அறிந்த பின்னரும், பெண்ணின் தந்தை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

​வீட்டு CCTV காட்சிகளை ஆய்வு செய்ததில், திங்கள் அதிகாலை 1.12 மணிக்கு அவர்கள் வீட்டுக்கு வந்து, மீண்டும் 2.20 மணிக்கு அதே காரில் புறப்பட்டுச் சென்றது தெரியவந்துள்ளது.

​இவர்களைப் பற்றி தகவல் ஏதேனும் தெரிந்தால் உடனடியாக அருகிலுள்ள போலீஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு போலீஸாரும் குடும்பத்தினரும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!