Latestமலேசியா

கோலாலம்பூர் தாமான் டேசாவில் மூதாட்டி கட்டிப்போட்டு RM20,000 கொள்ளை

கோலாலம்பூர், ஆகஸ்ட் 5 – கோலாலம்பூர், தாமான் டேசாவில் 77 வயது மூதாட்டி ஒருவர் வீட்டில் தனியாக இருந்தபோது, முகமூடி அணிந்த இரு கொள்ளையர்கள் வீட்டிற்குள் புகுந்து, அவரைக் கட்டிப்போட்டு, வாயை அடைத்து, கத்தி முனையில் மிரட்டி வீட்டைச் சோதனையிட்டு 20,000 ரிங்கிட் ரொக்கப் பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.

மூதாட்டிக்கு உடல் காயம் ஏற்படவில்லை என்றும் சம்பவத்தின் போது சந்தேகநபர்கள் தமிழில் பேசியதாகவும் கூறப்படுகிறது.

மேலும் சம்பவம் தொடர்பாக பிரிக்ஃபீல்ட்ஸ் மாவட்ட காவல்துறைத் தலைவர் Hoo Chang Hook உறுதிப்படுத்தியதுடன், CCTV காட்சிகளின் அடிப்படையில் விசாரணை தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!