Latestமலேசியா

சபாவில் ஆண்டு முழுவதும் முதலைகளை வேட்டையாடலாம்; ஆனால் உரிமத்துக்கு விண்ணப்பிக்கத் தான் ஆளில்லை

கோத்தா கினாபாலு, மே-15, சபாவில் முதலைகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தும் முயற்சியாக, ஆண்டு முழுவதும் முதலை வேட்டைக்கான உரிமத்தை மாநில வனவிலங்குத் துறை வழங்குகிறது.

எனினும் அந்த உரிமத்துக்கு விண்ணப்பித்து இதுவரை மிகக் குறைவான மனுக்களே வந்துள்ளன.

அந்த அளவுக்கு வரவேற்பு குறைவாக இருப்பதாக சபா சுற்றுலா, பண்பாடு மற்றும் சுற்றுச் சூழல் அமைச்சர் Datuk Christina Liew குறைப்பட்டுக் கொண்டார்.

முதலை வேட்டையானது, மனிதர்களுக்கும் முதலைகளுக்கும் இடையிலான மோதலைக் குறைக்கும் என்பதோடு, முதலை சார் தொழில்துறையை உருவாக்கவும் வகைச் செய்யும் என்றார் அவர்.

சபாவில் முதலை சார் தொழில்துறை நீடித்து நிலைப்பெற இந்த முதலை வேட்டை உதவும் என்றும் அமைச்சர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

நீர் நிலைகளில் முதலைகளைக் கண்டு மக்கள் பயப்படத் தேவையில்லை; மாறாக, வேட்டையாடப்படும் முதலைகள் மக்களின் பார்வைக்காக பாதுகாப்பான இடங்களில் வளர்க்கப்பட்டு வரும் என்றார் அவர்.

சபாவில் மனிதர்களை முதலைகள் தாக்கும் சம்பவங்கள் அதிகரித்ததை அடுத்து, ஈராண்டுகளாக அங்கு முதலை வேட்டைக்கான உரிமங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!