
கோலா பெராங், அக்-09-திரங்கானு, Kuala Berangங்கில் Jalan Kuala Terengganu-Bukit Besi சாலையின் 31ஆவது கிலோமீட்டரில் காரொன்று மோதியதில் 45 வயதுடைய துரித உணவக நிர்வாகி ஒருவர் உயிரிழந்தார்.
நேற்றிரவு சுமார் 8.15 மணியளவில், சாலையின் இடப்புறத்திலிருந்து வலப்புறத்தைக் கடக்க முயன்றபோது, Kuala Terengganuவில் இருந்து Kuala Berang நோக்கிச் சென்ற புரோட்டான் சாகா கார் அவர் மீது மோதியதாக Hulu Terengganu மாவட்டக் காவல் துறைத் தலைவர் Sharudin Abdul Wahab தெரிவித்தார்.
தலையில் ஏற்பட்ட பலத்த காயங்களால் Nor Haizura Mamat Sidek எனும் அப்பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனைக்காக Hulu Terengganu மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
24 வயதுடைய ஆடவர் காரை ஓட்டியதாகவும், அவருடன் 22 வயதுடைய பெண் பயணி இருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. விபத்தில் ஓட்டுநருக்கும் பயணிக்கும் காயம் ஏற்படவில்லை.
விபத்து நடந்தபோது மழை பெய்ததால் சாலை ஈரமாக இருந்ததுடன், அப்பகுதியில் தெருவிளக்குகளும் இல்லை என Sharudin கூறினார். அச்சம்பவம் 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 41(1)-இன் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



