Latestமலேசியா

சாலையோரத்தில் இறந்து கிடந்த ஆடவருக்கு கோவிட் தொற்று

குவாலா லங்காட், ஆகஸ்ட் 1 –  சிலாங்கூர், குவாலா லங்காட் , தஞ்சோங் செப்பாட்டில், ஜாலான் 3 தெபி லாவுட் ( Jalan 3  Tepi laut ) சாலை  ஓரத்தில், விழுந்து கிடந்த  ஆடவர் , கோவிட் -19 தொற்றால் உயிரிழந்திருப்பதை போலீஸ்  உறுதிப்படுத்தியது.

பொது மக்கள் கொடுத்த தகவலை அடுத்து, சம்பவ இடத்தை அடைந்த  தஞ்சோங் செப்பாட்  சுகாதார கிளினிக்கின் அவசர பிரிவினர் ,   அந்த ஆடவர்  ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தியதாக,  குவாலா லாங்காட் மாவட்ட போலீஸ் தலைவர் அஹ்மாட் ரிட்வான்  மொஹ்மட் நோர் சாலே தெரிவித்தார்.

பின்னர் அந்த ஆடவரின் உடல் பந்திங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சவப் பரிசோதனையில் அவருக்கு கோவிட் தொற்று கண்டிருந்தது  தெரிய வந்தது.

உயிரிழந்தவர் 53 வயது மதிக்கத்தக்க உள்நாட்டு ஆடவர் என உறுதிப்படுத்தப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!