Latestமலேசியா

சிலாங்கூரில் 5 குண்டர் கும்பலைச் சேர்ந்த 21 பேர் கைது

கோலாலம்பூர், மே 29 – ஐந்து குண்டர் கும்பலைச் சேர்ந்த திட்டமிட்ட குற்றச் செயல் குழுவின் 21 உறுப்பினர்கள் புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறை மேற்கொண்ட ஓப்ஸ் லீமா நடவடிக்கையின்போது கைது செய்யப்பட்டப்பட்டனர். Johor, Pahang மற்றும் சிலாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையில் அவர்கள் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமான் குற்றவியல் விசாரணைத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ Mohamad Shuhaily Mohd Zain தெரிவித்தார். 26 முதல் 51 வயதுடைய அந்த கும்பலைச் சேர்ந்த 21 பேரும் கொலை, போதைப் பொருள், மிரட்டிப் பணம் பறிப்பது மற்றும் தீ வைக்கும் சதி நாசச் செயலில் ஈடுபட்டு வந்திருப்பது விசாரணையில் தெரியவந்திருப்பதாக அவர் கூறினார்.

வெவ்வேறு ஐந்து குண்டர் கும்பலைச் சேர்ந்த அந்த ஐவரும் 2019ஆம் ஆண்டு முதல் சிலாங்கூரில் திட்டமிட்ட குற்றச் செயலில் ஈடுபட்டு வந்துள்ளனனர். அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டதை உணர்ந்த இதர 10 உறுப்பினர்கள் தற்போது தலைமறைவாகியிருப்பதால் அவர்களை தேடி கண்டறியும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக இன்று காலை புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் Mohamad Shuhaily தெரிவித்தார். கைதான நபர்களில் 18 பேர் , 2012 ஆம் ஆண்டின் சொஸ்மா சடடத்தின் (சிறப்பு நடவடிக்கையின் ) கீழ் 28 நாட்களுக்கு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். இருவருக்கு தடுப்புக் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கைதைனவர்களில் 20 ஆடவர்கள் மீது இன்று காலை கிள்ளான் செஷன்ஸ் நிதிமன்றத்தில் திட்டமிட்ட குற்றல் செயல் கும்பலின் உறுப்பினராக இருந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. நீதிபதி Ahmad Faizadh முன்லையில் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது அதனை பரிந்து கொண்டதற்கு அடையாளமாக அவர்கள் தலையசைத்தனர். சொஸ்மா சட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்ட குற்றச்சாட்டு மீதான விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடைபெறவிருப்பதால் அவர்களிடம் வாக்குமூலம் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!