Latestமலேசியா

டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்து ஆடவர் காயம்

கெடா, Yan-ல் Kampung Permatang Keramat பகுதியில், டுரியான் மரம் ஒன்று வீட்டின் மீது விழுந்ததில் ஆடவர் ஒருவர் காயமடைந்தார்.

அச்சம்பவத்தில் 40 வயதான Ku Osman Ku Hamid ட்டுக்கு வலது கால் மற்றும் இடது கையில் காயம் ஏற்பட்டது. காலை 10.07 மணியளவில் தகவல் கிடைத்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்றதாக மாநில தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் செயல்பாட்டு மையம் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளது.

சம்பவ இடத்தைச் சென்றடைந்த போது, ​​டுரியான் மரம் வீட்டின் மீது விழுந்ததால், பாதிக்கப்பட்ட நபர் வீட்டின் மேல் பகுதியில் சிக்கியிருந்தது கண்டறியப்பட்டது.

சிறப்புக் கருவிகளின் உதவியுடன் அவர் மீட்கப்பட்டார். பின்னர் அவர் மேல் நடவடிக்கைக்காக சுகாதாரக் குழுவிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவ்வறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மீட்பு நடவடிக்கைகள் காலை 10.46 மணியளவில் நிறைவு பெற்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!