Latestமலேசியா

தாபோங் ஹஜி திவாலாவதைத் தடுக்கவே அரசாங்கம் அதில் தலையிட்டது – பிரதமர் அன்வார்

சிரம்பான், ஜூலை.30 – Tabung Hajiயைக் காப்பாற்றவே அரசாங்கம் வேறு வழியில்லாமல் அதில் தலையிட்டு நிதியைச் செலுத்தியதாக பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். தொடர்ந்து நஷ்டத்தை எதிர்கொண்டால் அது திவாலாகும் சூழ்நிலை காணப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்.

அதில் இழக்கப்பட்ட தொகை, பணம் வைத்திருந்தவர்களுக்குச் சொந்தமான பில்லியன் கணக்கான ரிங்கிட் ஆகும். அவர்களில் பலர் ஹஜ் யாத்திரை மேற்கொள்வதற்காகப் பல ஆண்டுகளாகக் கடினமாக உழைத்துச் சேமித்த சாதாரண மலேசியர்கள் என்றும் பிரதமர் கூறினார். அப்போதைய அரசாங்கம் அந்த நிலை தொடர அனுமதித்திருந்தால், Tabung Haji திவாலாகியிருக்கும். அதன் காரணமாகத்தான் அரசாங்கம் நிதியைச் செலுத்த வேண்டியிருந்ததாக அன்வார் விளக்கினார்.

Tabung Haji தொடர்பான RCI எனும் அரச விசாரணை ஆணையத்தின் அறிக்கையை ரகசியப் பட்டியலிலிருந்து நீக்கி, அதனைப் பொதுவில் வெளியிட முன்னதாக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அந்த அறிக்கை விரைவில் மக்களவையின் சிறப்புக் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படும் என அரசாங்கப் பேச்சாளர் Datuk Seri Fahmi Fadzil கூறியிருந்தார்.

நேற்றிரவு நெகிரி செம்பிலான், Betaria Business Centreரில் Sikamat தொகுதிக்கான தேர்தல் பிரச்சாரத்தின் போது அன்வார் அத்தகவலை வெளியிட்டார். இவ்வேளையில், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பொதுச் சொத்துக்கள் முறைகேடாகக் கையாளப்படுவது போன்ற விஷயங்களுக்கு எதிராகக் குரல் கொடுக்க வாக்காளர்கள் தேர்தலை ஒரு நல்ல வாய்ப்புகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என Pakatan Harapan கூட்டணியின் தலைவருமான அன்வார் நினைவுறுத்தினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!