Latestமலேசியா

தாய்லாந்து காருக்கு RON95 பெட்ரோலை விற்ற எண்ணெய் நிலைய உரிமையாளருக்கு ; RM30,000 அபராதம்

செலாயாங், ஏப்ரல் 26 – தாய்லாந்திலிருந்து வந்த கார் ஓட்டுனர் ஒருவருக்கு, RON95 ரக பெட்ரோலை விற்பனை செய்த, எண்ணெய் நிலைய உரிமையாளர் ஒருவருக்கு, செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று 30 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

61 வயது முஹமட் நசிருடின் அபு ஹசான் எனும் அந்நபர் தமக்கு எதிரான குற்றத்தை ஒப்புக் கொண்டதை அடுத்து, அவருக்கு அந்த தண்டனை விதிக்கப்பட்டது.

அபராத்தை செலுத்த தவறும் பட்சத்தில், அவர் ஆறு மாதங்கள் சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த வேளை ; சம்பந்தப்பட்ட நபர் தமக்கு விதிக்கப்பட்ட அபராத்த்தை இன்று செலித்துவிட்டார்.

முன்னதாக, நெடுஞ்சாலை R&R ஓய்வுப் பகுதியிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில், தாய்லாந்து பதிவு எண் கொண்ட கார் ஒட்டுனர் ஒருவர், RON95 பெட்ரோலை நிரப்பிச் செல்லும் காணொளி ஒன்று கடந்த ஜனவரியில் வைரலாது.

ஜனவரி முதலாம் தேதி, காலை மணி 9.16 வாக்கில், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையில், வட மாநிலங்களை நோக்கி செல்லும் பாதையில், R&R ஓய்வுப் பகுதியிலுள்ள, எண்ணெய் நிலையம் ஒன்றில் நிகழ்ந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!