Latestமலேசியா

தேசிய அடையாளத்தின் அடித்தளம் வரலாறு – ஒருமைப்பாட்டு அமைச்சர் ஏரன்

பிந்துலு, மே-12-வரலாறு என்பது வெறும் கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல, அது ஒரு நாட்டின் தேசிய அடையாளத்தை உருவாக்குவதற்கான அடிப்படை என தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரோன் அகோ டகாங் தெரிவித்துள்ளார்.

பெர்லிஸ் மலேசியப் பல்கலைக்கழகத்தில் (UniMAP) நடைபெற்ற ‘தேசிய வரலாற்று மாநாடு 2026’-ல் கலந்துகொண்டு அவர் உரையாற்றினார்.

வலுவான வரலாற்றுப் புரிதல் இல்லாமல், மக்களிடையே ஒற்றுமையையும் நாட்டுப்பற்றையும் வளர்ப்பது கடினம் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

“ஒன்றிணைந்து தேசத்தைக் கட்டியெழுப்புவோம்” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த மாநாட்டை, பெர்லிஸ் ராஜா மூடா, Tuanku Syed Faizuddin Putra Jamalullail அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.

2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில், அரச நிறுவனங்களின் வரலாறு, தேசியவாத இயக்கங்கள் மற்றும் மடானி சமூக மேம்பாடு குறித்து 14 ஆய்வாளர்கள் தங்களின் கருத்துகளை முன்வைக்கின்றனர்.

நாட்டின் வரலாற்று ஆவணங்களைப் பாதுகாப்பதிலும், அதனை முறையாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு சேர்ப்பதிலும் தேசிய ஆவணக் காப்பகம் (Arkib Negara) தொடர்ந்து முனைப்புடன் செயல்படும் என்றும் டத்தோ ஏரன் உறுதியளித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!