
தோக்யோ, ஏப்-22- Tokyo Dome City Attractions பூங்காவில் ஞாயிற்றுக்கிழமையன்று Flying Ballon சவாரி பகுதியில் ஏற்பட்ட விபத்தின்போது ஐந்து மணி நேரம் சிக்கிக்கொண்ட பொழுதுபோக்கு பூங்காவின் 24 வயது ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
உள்ளூர் நேரப்படி காலை மணி 11.50 க்கு இந்த விபத்து நடந்தபோது Tokyo Dome-ன் ஊழியரான Hina Kamimura அங்குள்ள உபகரணங்களை ஆய்வு செய்து கொண்டிருந்தபோது சிக்கிக்கொண்டார்.
Flying Ballon சவாரியில், ஒரு மையத் தூணைச் சுற்றி வட்ட வடிவில் சுழலும் 12 இருக்கைகள் உள்ளன. இவை 10 மீட்டர் உயரம் வரை செல்லும் திறன் கொண்டவை.
அந்த ஊழியர் தூணுக்கு அருகில் ஓர் ஏணியில் இருந்தபோது, அந்த அமைப்புக்கும் சவாரியின் கீழ் இறங்கும் இருக்கைகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டதாக உள்ளூர் போலீசாரும் பொழுதுபோக்கு மையத்தின் நடத்துனரும் தெரிவித்தனர். ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு மாலை 5 மணியளவில் அவர் மீட்கப்பட்டபோதிலும் பின்னர் இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, அந்த கேளிக்கை பூங்கா அன்றைய தினம் உடனடியாக மூடப்பட்டது.



