Latestமலேசியா

நிபோங் தெபால் கடையில் துணிகரக் கொள்ளை: இளைஞரைக் கத்தியால் வெட்டிவிட்டு தப்பிய கும்பல்

நிபோங் திபால், ஜூன்-3-பினாங்கு, நிபோங் தெபாலில் உள்ள ஒரு மளிகைக் கடையில், 27 வயது இளைஞர் ஒருவரைப் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொள்ளையடித்துச் சென்ற இருவரைப் போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு, தாமான் பிஸ்தாரியில் உள்ள Easy To U Mart கடையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

முகமூடி அணிந்து கத்தியுடன் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த இளைஞரைத் தாக்கியுள்ளனர்.

இதில் அந்த இளைஞரின் தலை மற்றும் கைகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

கடையிலிருந்து 500 ரிங்கிட் மதிப்புள்ள ரொக்கம் மற்றும் சிகரெட் பெட்டிகளை அவர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.

​சம்பவம் தொடர்பான CCTV காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், கொள்ளையர்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனம் வெளிநாட்டுப் பதிவு எண்ணைக் கொண்டது என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.

​பாதிக்கப்பட்ட இளைஞர் சன்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வேளையில், தப்பியோடிய குற்றவாளிகளைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!