Latest

நீண்டகால வீட்டு பிரச்சினைக்கு தீர்வு: 14 குடும்பங்களுக்கு புதிய வீடுகள்

ஜோர்ஜ்டவுன், அக்டோபர் 8 – பினாங்கு ஜோர்ஜ்டவுன் கம்போங் மாக்காவ் சுவா குடியிருப்பாளர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்ட வீட்டு பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், Rumah Pangsa Pekatra Indah- விலுள்ள Rumah MutiaraKu (RMKu) வகை A வீடுகளின் சாவிகள் 14 குடும்பங்களுக்கு இன்று வழங்கப்பட்டன.

பினாங்கு மாநில வீடமைப்பு மற்றும் சுற்றுச்சூழல் ஆட்சிக்குழு உறுப்பினர் YB டத்தோ ஸ்ரீ சுந்தராஜு சோமு தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், நில உரிமையாளர் நிலத்தை விற்பனை செய்ய முடிவு செய்ததால் வீடுகளை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளான குடியிருப்பாளர்களுக்கு புதிய வீடுகள் வழங்கப்பட்டன. பெரும்பாலானோர் மூத்த குடிமக்களாக இருந்ததுடன், புதிய வீடுகளை வாங்குவதற்கான பொருளாதார வசதியும் குறைவாக இருந்தது.

இதையடுத்து, பினாங்கு மாநில அரசும் பினாங்கு மாநில வீடமைப்பு வாரியமும் (LPNPP) இணைந்து, 42,000 ரிங்கிட் மதிப்புள்ள RMKu வீடுகளை Skim Sewa Beli (Rent-To-Own – RTO) திட்டத்தின் கீழ் வழங்கின.

Rumah Pangsa Pekatra Indah திட்டம் 7 ஏப்ரல் 2026 அன்று நிறைவடைந்தது. மூன்று கட்டிடங்களைக் கொண்ட இத்திட்டத்தில் 336 வீடுகள் உள்ளன. ஒவ்வொரு வீடும் சுமார் 650.8 சதுர அடி பரப்பளவு கொண்டதுடன், ஒரு வாகன நிறுத்துமிடமும் வழங்கப்படுகிறது. மேலும், Blok C-இல் உள்ள 107 வீடுகளை LPNPP வாங்கி, அவற்றை Skim Sewa Beli திட்டத்தின் கீழ் வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

குடியிருப்பாளர்களின் பிரச்சினை தனியார் நிலம் தொடர்பானதாக இருந்தாலும், அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மாநில அரசு நடைமுறைக்கு ஏற்ற மற்றும் நீடித்த வீட்டுத் தீர்வை வழங்கியுள்ளதாக சுந்தராஜு சோமு தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!