Latestமலேசியா

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்த இஸ்மாயில் சப்ரி IJN மருத்துவமனையில் அனுமதி

கோலாலம்பூர், ஆகஸ்ட்-7-முன்னாள் பிரதமர் டத்தோ ஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், தேசிய இருதய சிகிச்சைக் கழகமான IJN-னில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், இன்று நடைபெறவிருந்த நீதிமன்ற நடவடிக்கைகள் மருத்துவமனைக்கு மாற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

​சொத்து அறிவிப்பு தொடர்பான மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் விசாரணையைத் தொடர்ந்து, பெரா நாடாளுமன்ற உறுப்பினரான இஸ்மாயில் சப்ரி இன்று காலை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவிருந்தார்.

​எனினும், அவரது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு, மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் குற்றச்சாட்டை வாசிக்கும் நடைமுறையை IJN மருத்துவமனையிலேயே நடத்துவதற்கு அரசு தரப்பு அனுமதி கோரவுள்ளது.

​இந்த வழக்கு விசாரணையின் ஒரு பகுதியாக, ஏற்கனவே MACC அதிகாரிகளால் 170 மில்லியன் ரிங்கிட் ரொக்கப் பணமும், 7 மில்லியன் ரிங்கிட் மதிப்பிலான தங்கக் கட்டிகளும் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!