Latestமலேசியா

ஊழல் காரணமாக ஐந்தே ஆண்டுகளில் 27 ஆயிரம் கோடி ரிங்கிட் இழப்பு; அதிர வைக்கும் MACC-யின் புள்ளி விவரங்கள்

புத்ராஜெயா, மே-7, 2018 முதல் 2023 வரைக்குமான ஐந்தாண்டு காலத்தில் லஞ்ச லாவண்யம் காரணமாக நாடு கிட்டத்தட்ட 27,700 கோடி ரிங்கிட் நட்டத்தைச் சந்தித்திருக்கிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் MACC-யின் தலைமை ஆணையர் Tan Sri Azam Baki அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார்.

ஊழல் பெருச்சாளிகளால் அக்காலக்கட்டத்தில் ஆண்டொன்றுக்கு சுமார் 5,500 கோடி ரிங்கிட் நட்டத்தை மலேசியா சந்தித்திருப்பதாக அவர் சொன்னார்.

அது கொஞ்ச நஞ்ச தொகையல்ல; மக்களின் வாழ்வாதாரத்திற்கும் அடிப்படை வசதிகளுக்கும் பயன்பட்டிருந்தால், லட்சக்கணக்கானோர் பலன் பெற்றிருப்பர்; ஆனால் அனைத்து மட்டத்திலான லஞ்ச லாவண்யங்களால் பெரும் இழப்பு ஏற்பட்டிருப்பதை Azam Baki சுட்டிக் காட்டினார்.

இவ்வேளையில், CPI என்றழைக்கப்படும் ஊழல் கண்ணோட்டக் குறியீட்டில் மலேசியாவின் நிலை மேம்பட்டிருப்பதற்கு, 2019-2023 தேசிய ஊழல் தடுப்புத் திட்டம் பெரிதும் உதவியிருக்கிறது.

அடுத்த பத்தாண்டுகளில் CPI பட்டியலில் முதல் 25 இடங்களைப் பிடிக்க மலேசியா இலக்குக் கொண்டுள்ளது.

NACS எனப்படும் 2024-2028 தேசிய ஊழல் தடுப்பு வியூகங்கள் அறிமுக விழாவில் உரையாற்றிய போது அவர் அவ்வாறு சொன்னார்.

அவ்விழாவை முன்னதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தொடக்கி வைத்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!