
பாசீர் மாஸ், ஆகஸ்ட்-14-கிளந்தான், பாசீர் மாஸில் 14 வயது மாணவரைத் தாக்கியதுடன், அவரது தாயாரையும் அறைந்ததாகச் சந்தேகிக்கப்படும் 54 வயது ஆசிரியர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
கடந்த செவ்வாய்க்கிழமை இடைநிலைப்பள்ளி ஒன்றில் இந்த ஆசிரியர் அந்த மாணவரைத் தாக்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, மறுநாள் இச்சம்பவம் குறித்துப் பேச வந்த மாணவரின் 42 வயது தாயாரையும் அந்த ஆசிரியர் அறைந்ததாகக் கூறப்படுகிறது.
உடனடியாக அத்தாய் அளித்த புகாரின் பேரில் ஆசிரியர் கைதுச் செய்யப்பட்டார்.
கைதான ஆசிரியர், விசாரணைக்காக நேற்று முதல் மூன்று நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.இச்சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வருகிறது.



