Latestஉலகம்

பால்டிமோர் பாலம் நிகழ்வு: இந்தியர்களை விமர்சித்து கார்டூன் வெளியிட்ட அமெரிக்க நிறுவனத்தை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்

நியூயார்க், ஏப்ரல் 1 – சமீபத்தில் அமெரிக்காவில் கப்பல் ஒன்று மோதியதில் பாலம் உடைந்த சம்பவம் குறித்து, இந்தியர்கள் மீது வெறுப்பை காட்டும் கார்டூன் வீடியோ ஒன்றை அமெரிக்க நிறுவனம் பகிர்ந்துள்ளது.

கடந்த 26 ஆம் திகதி, அமெரிக்காவின் பால்டிமோர் நகர துறைமுகத்தின் முக்கிய போக்குவரத்து வழித்தடமாக விளக்கும் பிரான்சிஸ் ஸ்காட் கீ என்ற பாலத்தை சரக்குக் கப்பல் ஒன்று கடக்க முயன்ற போது, எதிர்பாராத விதமாக பாலத்தின் மீது மோதி அதன் பெரும்பகுதி உடைந்து ஆற்றில் விழுந்தது.

அந்த கப்பலில் 22 இந்திய மாலுமிகள் இருந்ததாக தகவல் வெளியானது. இந்நிலையில் இந்தியர்கள் மீது வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில், அமெரிக்காவை சேர்ந்த ‘Foxford Comic’ என்ற நிறுவனம் இந்த சம்பவத்தை சித்தரிக்கும் கார்டூனைப் பகிர்ந்துள்ளது.

அந்த வீடியோவில், கப்பலில் உள்ள பணியாளர்கள், இடுப்பில் மட்டுமே ஆடை அணிந்து, ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு உரையாடிக்கொள்வது போல் அமைந்திருந்தது. அந்த கப்பலின் கேபினில் இறுதியாக இதுதான் நடந்திருக்கும் என்று அந்த கார்டூனுடன் அந்த comic தளம் பதிவிட்டு வெளியிட்டுள்ளது.

இந்தியர்களை இனவெறியாக தாக்கும் வகையில் மட்டுமின்றி, கப்பல் பணியாளர்களை குறைமதிப்பிற்கு இது உட்படுத்துவதாகவும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வைரலாகும் இந்த கார்டூடனை பகிர்ந்த நிறுவனத்திற்கு கடுமையாக விமர்சனங்கள் எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!