Latestமலேசியா

பினாங்கு ‘அவுடி’ கார் உட்பட 4 கார்கள் தீப்பற்றி சேதம்

பினாங்கு, ஆகஸ்ட் 7 – பினாங்கு, ஜார்ஜ்டவுனிலுள்ள ஜாலான் ஜெலுத்தோங் (Jalan Jelutong) சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த நான்கு கார்கள் இன்று அதிகாலை தீப்பற்றி சேதமடைந்தன.

தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையினருக்கு அதிகாலை 1.35 மணியளவில் தகவல் கிடைத்தது. ‘அவுடி’ (Audi) மற்றும் ஹூண்டாய் கார்கள் தலா 30 விழுக்காடும், புரோட்டான் X50 40 விழுக்காடும், பெரோடுவா விவா 50 விழுக்காடும் தீயில் சேதமடைந்தன. இதில் இரண்டு வாகனங்களுக்கு பதிவு எண்கள் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

மூன்று கார்கள் பின்புறத்தில் தீ சேதமடைந்த நிலையில், மற்றொரு காரின் இயந்திரப் பகுதியில் தீ பரவியது. தீயணைப்பு வீரர்கள் விரைவாக தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்தச் சம்பவத்தில் உயிரிழப்போ காயங்களோ எதுவும் ஏற்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!