
ஜோர்ஜ்டவுன், ஆகஸ்ட்-8-பினாங்கு பாலத்திற்கு அடியில் மீன் பிடித்த ஒரு பெண் உட்பட 3 உள்ளூர்வாசிகளை மலேசிய கடலோரக் காவல் படை (MMEA) கைதுச் செய்துள்ளது.
பாதுகாக்கப்பட்ட தேசிய உட்கட்டமைப்புச் சொத்துகளாக பினாங்கு பாலம் மற்றும் சுல்தான் அப்துல் ஹலீம் முவாட்சாம் ஷா பாலம் அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளன.
எனவே அவற்றின் பாதுகாப்பை உறுதிச் செய்யவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக MMEA தெரிவித்துள்ளது.
தவிர, பாலத்திற்கு அடியில் உயர் மின்சார கேபிள்கள் மற்றும் தொலைத்தொடர்பு கேபிள்கள் செல்வதால், 250 மீட்டர் சுற்றளவுக்குப் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கைதுச் செய்யப்பட்ட மூவர் மீதும் குற்றவியல் அத்துமீறல் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நிலைமை இவ்வாறிருக்க, இந்த நடவடிக்கையால் தங்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகப் படகு ஓட்டுநர்களும் மீன்பிடிப்பாளர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.



