Latestமலேசியா

புதிய உச்சம்; மலேசியாவில் மருத்துவக் காப்புறுதிக் கோரிக்கைகள் RM9.4 பில்லியனாக உயர்வு

கோலாலம்பூர், ஏப்ரல்-15-மலேசியாவில் மருத்துவக் காப்புறுதிக் கோரிக்கைகள் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளன.

2025-ஆம் ஆண்டில் மட்டும் மருத்துவக் கோரிக்கைகளுக்காக வழங்கப்பட்டத் தொகை 9.4 பில்லியன் ரிங்கிட்டை எட்டியுள்ளன.

மலேசிய ஆயுள் காப்புறுதி சங்கமான LIAM வெளியிட்டுள்ள 2025-ஆம் ஆண்டுக்கான வருடாந்திர அறிக்கையின்படி, மருத்துவக் கோரிக்கைகள் முந்தைய ஆண்டை விட 5.3 விழுக்காடு அதிகரித்துள்ளன.

நாட்டின் மொத்த காப்புறுதி பணப்பட்டுவாடாவில், மருத்துவச் செலவுகள் மட்டுமே சுமார் 54 விழுக்காடு ஆக்கிரமித்துள்ளன.

மரணம் மற்றும் ஊனமுற்றோருக்கான பலன்கள் உட்பட மொத்தத் தொகை 17.4 பில்லியன் ரிங்கிட்டாக உயர்ந்துள்ளது.

குறிப்பாக, ஊனமுற்றோருக்கான காப்புறுதிப் பலன்கள் 77 விழுக்காடு வரை பெரும் வளர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளன.

எனவே, மருத்துவப் பணவீக்கம் மற்றும் அதிகரித்து வரும் கோரிக்கைகள் காரணமாக, காப்புறுதி பிரீமியம் உயர்வு என்பது ‘தவிர்க்க முடியாதது’ என காப்புறுதித் துறை வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!