Latestமலேசியா

பூச்சோங்கில் மர தொழிற்சாலை தீக்கிரையானது: 80% பகுதி சேதம்

பூச்சோங், மே 21 – இன்று அதிகாலை பூச்சோங் தாமான் புத்ரா பெர்டானாவிலிருக்கும் ஒரு மர தொழிற்சாலை தீக்கிரையானதில் அதன் 80 விழுக்காடு பகுதி சேதமடைந்தது.

சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை (JBPM) தகவலின்படி, அதிகாலை 2.05 மணிக்கு அவசர அழைப்பு கிடைத்ததைத் தொடர்ந்து, சைபர்ஜெயா, டெங்கில், பூச்சோங் மற்றும் ஸ்ரீ கெம்பாங்கான் (Dengkil, Puchong dan Seri Kembangan) தீயணைப்பு நிலையங்களிலிருந்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர்.

மொத்தம் 28 தீயணைப்பு வீரர்கள் இணைந்து தீயை காலை 5 மணியளவில் கட்டுப்படுத்தினர்.

இந்த சம்பவத்தில் உயிரிழப்போ காயமோ ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!