Latestமலேசியா

பேராக்கில் 70 வயது தாயைக் கத்தியால் குத்திக் கொன்றதாக மகள் கைது

பேராக், செப்டம்பர் 28 – நேற்று, பேராக், மெங்லெம்புவிலுள்ள (Menglembu) தாமான் வாங் பகுதியில் 70 வயது மூதாட்டி ஒருவர் தனது 49 வயது மகளால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்தார்.

சம்பவம் குறித்து உயிரிழந்தவரின் மருமகன், இரவு 7 மணியளவில் காவல்துறையில் புகார் அளித்தார். விசாரணையில், உடல்நலக் குறைவால் படுத்த படுக்கையாக இருந்த தாயை அவரது மகள் கவனித்து வந்தது தெரியவந்தது. அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே மனநல சிகிச்சை பெற்ற வரலாறும் இருந்ததாக காவல்துறை தெரிவித்தது.

தாயை பராமரிக்கும்போது ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, மகள் கத்தியால் தாயின் இடது மார்பில் குத்தியதாகக் கூறப்படுகிறது. சந்தேக நபர் கைது செய்யப்பட்டதுடன், சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் கத்தியும் பறிமுதல் செய்யப்பட்டது.

அவர் அக்டோபர் 4ஆம் தேதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், காவல்துறை இவ்வழக்கை குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருகின்றது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!