
ஈப்போ . மே 26 – 21 கிலோவுக்கும் கூடுதலான போதைப் பொருளை விநியோகம் செய்ததாக மாற்று திறனாளி உட்பட இருவர் மீது ஈப்பே மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. மரண தண்டனை விதிக்கப்படும் அபாயகரமான போதைப் பொருள் சட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளியான 39 வயதுடைய எஸ்.கணேசன் மற்றும் ஆர். பிரபாகரன் ஆகியோருக்கு எதிரான குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது. அவ்விருவரும் இம்மாதம் 16ஆம் தேதி எண் 2 A. Jelapang Bayu 6. Puncak Jelapang கில் இரவு மணி 9 அளவில் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பபட்டனர். எனினும் அவ்விருவரிடம் எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. அவர்கள் மீதான குற்றச்சாட்டு ஜூலை 26ஆம் தேதி மறுவாசிப்புக்காக செவிமடுக்கப்படு