
கோலாலம்பூர், ஜூலை-15-போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து, சுமார் 300,000 ரிங்கிட் அரசு நிதியுதவியைப் பெற்று மோசடி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், முன்னாள் அரசு ஊழியர் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
30 வயது மதிக்கத்தக்க அந்நபர், 2020 முதல் 2025-ஆம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில், தான் பணியில் இருந்தபோது இந்த மோசடியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
விசாரணையில், அந்த நபர் 11 பேரின் தனிப்பட்ட விவரங்களை அவர்களின் அனுமதியின்றிப் பயன்படுத்தி, அரசு நிதியுதவி திட்டத்திற்கு விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
இதன் மூலம் மாதந்தோறும் 500 முதல் 1,000 ரிங்கிட் வரை அந்த நபரின் தனிப்பட்ட வங்கி கணக்கிற்கு நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்துப் புகார் எழுந்ததைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் கோலாலம்பூர் MACC அலுவலகத்தில் வாக்குமூலம் அளிக்க வந்த அவ்வாடவரை அந்த ஊழல் தடுப்பு ஆணைய அதிகாரிகள் கைதுச் செய்தனர்.
ஜூலை 17-ஆம் தேதி வரை அவரை 4 நாட்கள் தடுத்து வைக்க கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



