Latestமலேசியா

மலேசியாவிலேயே முழுமையாக குளிரூட்டப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாக உருமாறும் ராமதாசர் தமிழ்ப்பள்ளி – RSN ராயர்

மலேசியாவிலேயே அனைத்து வகுப்பறைகளும் முழுமையாக குளிரூட்டி பொருத்தப்பட்ட முதல் தமிழ்ப்பள்ளியாக பினாங்கு ராமதாசர் தமிழ்ப் பள்ளி உருவெடுக்கவுள்ளது.

இதற்கான உறுதியை ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் RSN ராயர் வழங்கியுள்ளதாக கூறினார்.

மாணவர்கள் சிறந்த, வசதியான சூழலில் கல்விக் கற்பதை உறுதிச் செய்யும் நோக்கில் இத்திட்டம் அமல்படுத்தப்படவுள்ளது.
-Interview-
இதன் ஒரு பகுதியாக, பள்ளியின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் மாணவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் புதிய நுழைவாயில் மற்றும் வெளியேறும் பாதை இன்று அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

அதில் சமூக நல மேம்பாடு மற்றும் இஸ்லாம் அல்லாதோர் விவகார ஆட்சிக்குழு உறுப்பினரும் சுங்கை பினாங்கு சட்டமன்ற உறுப்பினருமான லிம் சியூ கிம், மேலவை உறுப்பினர் செனட்டர் Dr லிங்கேஷ்வரன் ஆர் அருணாச்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

ராமதாசர் பள்ளியின் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக, ராயர் தனது நாடாளுமன்ற சேவை காலத்தில் இதுவரை கிட்டத்தட்ட 400,000 ரிங்கிட் நிதியை ஒதுக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தொடர் ஆதரவுக்கும் தொலைநோக்கு திட்டங்களுக்கும் பள்ளியின் ஒட்டுமொத்த நிர்வாகமும் பெற்றோர்களும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!