Latestமலேசியா

முதியோர் காப்பகத்தில் நண்பரைக் கொலை செய்த முதியவருக்கு 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை

மூவார், ஆகஸ்ட்-19-ஜோகூர், குளுவாங்கில் ஏழு ஆண்டுகளுக்கு முன் முதியோர் காப்பகமொன்றில் நிகழ்ந்த சண்டையின் போது தமது நண்பர் உயிரிழக்கக் காரணமான 68 வயது முதியவருக்கு மூவார் உயர் நீதிமன்றம் 13 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது. கொலை நோக்கமில்லாத அம்மரணத்தை விளைவித்த குற்றத்தை Mansur Poh Abdullah எனும் அம்முதியவர் ஒப்புக் கொண்டார்.

2019 ஆம் ஆண்டு அக்டோபர் 10 ஆம் தேதி குளுவாங், சிம்பாங் ரெங்காம், பத்து 7, Kampung Chokruவில் உள்ள அந்த முதியோர் இல்லத்தில் Asri Asmadi எனும் 55 ஆடவர் இறந்து விட்டதாக காவல் துறைக்குத் தகவல் கிடைத்ததாகவும், அதைத் தொடர்ந்து விசாரணைக்காக Mansur தடுத்து வைக்கப்பட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. Asriயுடனான சண்டையின் போது தாம் பாராங் கத்தி மற்றும் கத்தரிக்கோலைப் பயன்படுத்தியதை Mansur ஒப்புக் கொண்டார்.

சம்பவம் நிகழ்ந்த அன்று பின்புற விளக்கு கண்ணைப் கூசும் வெளிச்சத்தை ஏற்படுத்தியதால் அதை ஒளிரவிட வேண்டாம் என Mansur காப்பகத்தில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். Asri தவறுதலாக அந்த விளக்கை ஒளிரவிட்டதால் ஆத்திரமடைந்த Mansur, அவரைத் திட்டிக் கொண்டே சமையலறைக்குச் சென்று பாராங் கத்தியையும் கத்தரிக்கோலையும் கழுவியதை அங்குள்ளவர்கள் கண்டுள்ளனர்.

அதேவேளை, சத்தத்தைக் கேட்ட முதியோர் காப்பாகப் பணியாளர் ஒருவர் விரைந்து சென்று பார்த்த போது, Asri ரத்த வெள்ளத்தில் கிடந்ததையும், Mansur கையில் ஆயுதங்கள் இருந்ததையும் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!