
கோத்தா திங்கி, ஏப்ரல்-29-ஜோகூர் பெர்சாத்து முன்னாள் தலைவர் டத்தோ Tan Lek Khang, தவறுதலாக தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டதில், நெஞ்சுப் பகுதியில் படுகாயமடைந்தார்.
41 வயது Tan, நேற்று பிற்பகல் 3 மணியளவில் கோத்தா திங்கியில் உள்ள ஒரு துப்பாக்கிச் சூடு பயிற்சி மையத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
உடனடியாக ஜோகூர் பாரு சுல்தான் இஸ்மாயில் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்ட அவருக்கு, சுமார் 4 மணி நேரங்கள் அறுவை சிகிச்சை நடத்தப்பட்டு குண்டுகள் அகற்றப்பட்டன.
தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பாக இரண்டு துப்பாக்கிகளையும், தோட்டாக்களையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
துப்பாக்கிச் சட்டம் 1960-ன் பிரிவு 37-ன் கீழ் இந்த வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
தவறுதலாக துப்பாக்கி வெடித்ததற்கான சரியான காரணத்தை அறிய போலீஸார் தொடர்ந்து சாட்சிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தலைமை மீது நம்பிக்கை இழந்ததாகக் கூறி, கடந்த பிப்ரவரியில் Tan பெர்சாத்து கட்சியை விட்டு விலகியது குறிப்பிடத்தக்கது.



