Latestமலேசியா

மே 5ஆம் தேதி தொடங்கி 11ஆம் தேதி வரை 343 பேருக்கு டிங்கி -ஒருவர் மரணம்

மே  5 ஆம் தேதி தொடங்கி   11ஆம் தேதி வரை   நாட்டில்   343 பேர் புதிதாக டிங்கிச்  காய்ச்சலுக்கு  உள்ளாகினர்.   இதன்வழி இந்த நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,338 ஆக அதிகரித்தது.  அதற்கு முந்தைய வாரத்தை ஒப்பிடுகையில் 1,995 பேர் டிங்கி காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகியிருந்ததாக   சுகாதார அமைச்சின்  தலைமை இயக்குனர்  டத்தோ டாக்டர்  Muhammad  Radzi Abu Hassan  தெரிவித்தார்.  இந்த காலக்கட்டத்தில்  டிங்கி காய்ச்சலால் ஒருவர்  உயிரிழந்தார்.

இவ்வண்டின்   19 ஆவது வாரம்வரை   டிங்கியினால்   57,220 பேர்  பாதிக்கப்பட்டனர். கடந்த ஆண்டு  இதே காலக்கட்டத்தில்  41,175 பேர்  அந்நோயின் பாதிப்புக்கு உள்ளாகிருந்தனர். இவ்வாண்டு  இதுவரை  டிங்கியினால்  உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை  40 அக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டின்  முதல்  19 வாரங்களில்    26 மரணங்கள் மட்டுமே பதிவாகியிருந்தாக   Muhammad Radzi  சுட்டிக்காட்டினார்.   மேலும் டிங்கி பரவக்கூடிய   60 இடங்களும்  அடையாளம் காணப்பட்டன.  அவற்றில்  45 இடங்கள்  சிலங்கூரிலும் , கோலாலம்பூர் மற்றும்  புத்ரா ஜெயாவில்  ஏழு இடங்களும்,  சரவாவில் மூன்று இடங்களும் ,  பினாங்கில் இரண்டு இடங்களும்   கெடா,  பேரா மற்றும் நெகிரி செம்பிலானில் தலா ஒரு இடமும்  அடையாளம் காணப்பட்டன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!