Latestஉலகம்

மொத்தமாக 93 நாடுகளுக்கு விசா விலக்கு அறிவித்த தாய்லாந்து; சுற்றுப்பயணிகள் கொண்டாட்டம்

பேங்கோக், மே-31, தனது சுற்றுலாத் துறையை ஊக்குவிக்கும் முயற்சியில் விசா விலக்குச் சலுகையை இலங்கை உள்ளிட்ட 93 நாடுகளுக்கு தாய்லாந்து விரிவுப்படுத்தியுள்ளது.

இதையடுத்து அந்நாடுகளைச் சேர்ந்த சுற்றுப்பயணிகள், விசா இல்லாமல் தாய்லாந்துக்குள் நுழைய முடியும் அல்லது வந்திறங்கியதும் விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு வருபவர்கள் அதிகபட்சமாக 60 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்கலாம் என தாய்லாந்து அரசு அறிவித்துள்ளது.

சுற்றுலாத் துறை மூலமாக வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் அந்நாட்டு அமைச்சரவை செவ்வாயன்று அம்முடிவை எடுத்தது.

அந்த 93 நாடுகள் பட்டியலில் 57 நாடுகளைச் சேர்ந்தவர்கள், விசா இல்லாமல் தாய்லாந்தில் 30 நாட்கள் வரை தங்கியிருக்க ஏற்கனவே அனுமதிக்கப்பட்டவர்கள் ஆவர்.

13 நாடுகள் விசா விலக்கைப் பெற்றவை.

மேலும் 6 நாடுகள் தாய்லாந்தில் 60 நாட்கள் வரை விசா இன்றி தங்கியிருக்க அனுமதிக்கப்பட்டவை ஆகும்.

அவற்றில் மலேசியா, கனடா, செக் குடியரசு, டென்மார்க், ஃபின்லாந்தும் அடங்கும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!