புத்ராஜெயா, மார்ச் 2 – இம்மாதம் முதல் வெளிநாட்டில் இருந்து தருவிக்கப்படவிருக்கும் தங்களது அந்நிய நாட்டு தொழிலாளர்களை , தனிமைப்படுத்தி வைப்பதற்கான மையங்களுக்கு , முதலாளிமார்கள் முன்பதிவு செய்யத் தொடங்கலாமென , மனிதவள அமைச்சர் டத்தோ ஶ்ரீ எம். சரவணன் தெரிவித்தார்.
அந்நிய தொழிலாளர்கள் மருத்துவ பரிசோதனையில் தேர்வாகி விசா வழங்கப்பட்ட பின்னர், முதலாளிமார்கள் அதற்கு முன்பதிவு செய்யலாம்.
இவ்வேளையில், Nadma தேசிய பேரிடர் மையம் அங்கீகரித்துள்ள தனிமைப் படுத்தும் மையங்கள் கிள்ளான் பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்திருப்பதாக அமைச்சர் கூறினார். தனிமைப்படுத்தலுக்கான செலவு 2,000 ரிங்கிட்டிலிரிந்து 3,000 ரிங்கிட்டை எட்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.