Latestமலேசியா

ஷியா போதனை சந்தேகம்; பாகிஸ்தான், இந்தியா, வங்காளதேசத்தைச் சேர்ந்த 226 பேர் சுற்றிவளைப்பு

பெட்டாலிங் ஜெயா, ஜூன்-28-பெட்டாலிங் ஜெயாவில் உள்ள வளாகம் ஒன்றில், ஷியா (Shia) கொள்கை சார்ந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 200-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுப் பிரஜைகள் சுற்றிவளைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

ஷியா கொள்கையின் போதனைகள், நாட்டின் முதன்மையான இஸ்லாமிய நம்பிக்கை கோட்பாடு மற்றும் ஷரியா சட்டத் திட்டம் ஆகியவற்றுக்கு முரணாக இருப்பதன் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ​கடந்த வியாழக்கிழமை, சிலாங்கூர் மாநில இஸ்லாமிய விவகாரத் துறையான JAIS, போலீஸ், குடிநுழைவு இலாகா உள்ளிட்ட 120 அதிகாரிகள் அடங்கிய கூட்டுப் படையினர், Pusat Perdagangan Lagoon Perdana-வில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

​இந்தச் சோதனையின் போது, பாகிஸ்தான், இந்தியா மற்றும் வங்களாதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 147 ஆண்கள், 51 பெண்கள் மற்றும் 28 குழந்தைகள் உட்பட மொத்தம் 226 வெளிநாட்டினர் அங்கு இருப்பது கண்டறியப்பட்டது.

​உள்ளூர் இஸ்லாமிய ஃபத்வா (Fatwa) மற்றும் சட்டங்களுக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பிய குற்றச்சாட்டின் கீழ், சிலாங்கூர் ச
ஷரியா குற்றவியல் சட்டத்தின்படி JAIS இந்த விசாரணையைத் தொடங்கியுள்ளது.

​இதற்கிடையில், சட்டவிரோதமாக வளாகத்தை மறுசீரமைப்பு செய்ததற்காக, அதன் உரிமையாளருக்கு 14 நாட்கள் அவகாசம் வழங்கி சுபாங் ஜெயா மாநகர மன்றம் MBSJ நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

​உள்ளூர் இஸ்லாமிய சட்டங்களுக்கு முரணான கொள்கைகளில் பொது மக்கள் ஈடுபட வேண்டாம் என எச்சரித்துள்ள JAIS, இது தொடர்பான தகவல்களைத் தங்களின் hotline எண்ணுக்குத் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!