Latestமலேசியா

உடல் ரீதியாக அதிக சவாலான சுற்றுலா தலப் பட்டியலில் பத்துமலைக்கு ஆசியாவில் 4வது இடம்; உலகலவில் 10வது இடம்

கோலாலம்பூர், ஜூலை 1 – சிலாங்கூர், கோம்பாக்கில் அமைத்துள்ள பத்துமலை திருத்தளம் மலேசியாவின் மிகவும் பிரலமான சுற்றுலா தளங்களில் ஒன்றாகும்.

அதன் அழகிய மற்றும் ஆன்மீக அடையாளங்களுடன், கம்பீரமான இயற்கை சுண்ணாம்பு மலையின் உருவாக்கமும், முருகப் பெருமானின் 43 மீட்டர் தங்க சிலையுடன் 272 படிகட்டுகளை கொண்ட இம்மலை, உடல் ரீதியாக மிகவும் சவாலான சுற்றுலாத் தலங்களின் பட்டியலில் ஆசியாவில் 4வது இடத்தையும், உலகளவில் 10வது இடத்தையும் பிடித்திருக்கிறது.

பிரிட்டிஷ் ஹெல்த் கிளப்பின் (British Health Club) ப்யூர்ஜிம் (PureGym) அறிக்கை இந்த உடல் ரீதியாக சவாலான மொத்தம் 25 சுற்றுலாத் தலங்களின் பட்டியலை வெளியிட்டது.

272 படிக்கட்டுகள் அவ்வளவு சவால் இல்லை என்றாலும், இதர இன்னும் சவாலான் இடங்களை காட்டிலும் இங்குள்ள சராசரி வெப்பநிலை காரணமாக பத்துமலை உடல் ரீதியாக சவால்மிக்க சுற்றுலாத் தளங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!