Latestமலேசியா

உப்சி பரதநாட்டியப் பண்பாட்டுக் கழகம் நடத்தும் குறும்படப் போட்டி; Roll.Camera. Action- அத்தியாயம் ஒன்று

தஞ்சோங் மாலிம், ஏப்ரல் 17 – உப்சி எனப்படும் சுல்தான் இட்ரிஸ் கல்வியியல் பல்கலைக்கழகப் பரதநாட்டியப் பண்பாட்டுக் கழகத்தின் முதல் முயற்சியாகத் தேசிய அளவிலான குறும்படப் போட்டி நடைபெறவுள்ளது.

‘பல்கலைக்கழகத்தில் வாழ்க்கை’ என்ற கருப்பொருளைக் கொண்டு இந்த குறும்பட போட்டி நடத்தப்படுகிறது.

இப்போட்டியில் பங்கு கொள்வோர் பல்கலைகழக மாணவர்களாக ஒரு குழுவில் 3 முதல் 10 பேரும், குறும்படம் இதற்கு முன் வெளிவராத சொத்த படைப்புகளாகவும் இருக்க வேண்டும் என்று அதன் தலைவர் டினேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இதில் கலந்து கொள்பவர்கள் 20 நிமிடத்திற்கு மிகாமல் குறும்படங்களை இயக்கி அனுப்ப வேண்டும்.

போட்டிகான குறும்படத்தை எதிர்வரும் ஏப்ரல் 30ஆன் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென்று, மேல் விவரங்களுக்கு ஏற்பாட்டு குழுவினரை தொடர்பு கொள்ள கேட்டு கொள்ளப்படுகின்றனர்..

இதனிடையே, இப்போட்டியின் வெற்றியாளர்களுக்கு மலேசிய திரைப்பட இயக்குநர்கள் மற்றும் கலைஞர்கள் முன்னிலையில் RM 1000 ரிங்கிட் ரொக்கப் பரிசும் வழங்கப்படும் என்று ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!