Latestமலேசியா

உள்ளூர் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்கு வெளிநாட்டு தொழிலாளர்கள் காரணம் அல்ல

கோலாலம்பூர், மார்ச் 19 – உள்ளூர் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்கு வெளிநாடுகளைச் சேர்ந்த தொழில் திறன் பெற்ற தொழிலாளர்களை குறைகூறக்கூடாது என உயர் கல்வி அமைச்சர் Zamry Abdul Kadir தெரிவித்திருக்கிறார்.

பல மலேசியப் பட்டதாரிகள் வேலையில்லாமல் இருப்பதற்குப் பல்வேறு காரணங்கள் உள்ளன, அதில் அவர்களுக்கு வழங்க முன்வரும் குறைந்த ஊதியம் மற்றும் அவர்கள் வேலையை தேர்ந்தெடுக்கும் மனப்பான்மையை கொண்டிருப்பதும் ஒரு காரணம் என அவர் சுட்டிக்காட்டினார். பெரிக்காத்தான் நேசனல் Arau நாடாளுமன்ற உறுப்பினர் Sahidan Kassim எழுப்பிய கேள்விக்கு வழங்கிய எழுத்துப் பூர்வமாகபதில் அளித்தபோது Zamri இதனை தெரிவித்தார்.

தங்களது உயர்க்கல்வியை முடித்த பிறகும் வேலையில்லாமல் இருந்துவரும் பொறியியலாளர் பட்டதாரிகளின் எண்ணிக்கை குறித்தும் Sahidan Kassim வினவியிருந்தார். 2022 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி 53,257 பொறியியல் பட்டதாரிகள் பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும், 3,495 பேர் மட்டுமே வேலையில்லாமல் இருப்பதாகவும் Zamry கூறினார்.

25 வயதிற்குட்பட்ட புதிய பட்டதாரிகளில் பெரும்பாலோர் வேலையில்லாதவர்களாக உள்ளனர். இருப்பினும் அது தொடர்பான புள்ளி விவரத்தை Zamri வெளியிடவில்லை.
திறன் தொடர்பான குறைவேலையில் பட்டதாரிகளின் எண்ணிக்கை 2022 இல் 7.9 3 விழுக்காடு அதிகரித்து 1.68 மில்லியனாக உயர்ந்துள்ளது, இது முந்தைய ஆண்டில் அந்த எண்ணிக்கை 1.55 மில்லியனாக இருந்தது என கடந்த ஆண்டு நவம்பரில் புள்ளியியல் துறை கூறியிருந்தது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!