Latestமலேசியா

“என் நண்பர், வழிகாட்டி, சிறந்த ஆசான்”- காலஞ்சென்ற சைட் உசேன் அலிக்கு அன்வார் அஞ்சலி

கோலாலம்பூர், ஜூன் 30 – மறைந்த சைட் உசேன் அலி ( Syed Husin Ali) தனது நண்பர், வழிகாட்டி மற்றும் சிறந்த ஆசிரியர் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வர்ணித்து அவருக்கு அஞ்சலி செலுத்தினார். பிகேஆர் ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவருமான சைட் உசேன், மலாயா பல்கலைக்கழகத்தின் பேராசிரியராக பணியாற்றிய காலத்தில் தமது விரிவுரைகள் மூலம் பரந்த அறிவு, மதிப்புமிக்க குறிப்பு மற்றும் ஞானத்தையும் வெளிப்படுத்தியதை நினைவுகூர்ந்து அன்வார் தனது முகநூலில் பதிவிட்டார்.

சைட் உசேன் ஏழைகளின் நலனுக்காகவும், கட்சிக்காகவும் போராடியதோடு , நீதிக்கான உறுதிப்பாட்டிற்கும் மற்றும் தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் போராடிய ஒரு தனி நபர் என்றும் அன்வார் புகழாரம் சூட்டினார். அவர் ஏழைகளுக்காகவும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகவும் போராடுவதில் உறுதியானவர் மற்றும் நீதிக்கான எங்கள் போராட்டத்தில் இன்றியமையாத நபராகவும் அவரது சோசலிசப் போராட்டத்தில் ஆழமாகவும் வேரூன்றியவராக திகழ்ந்தார் என குறிப்பிட்டார்.

நகர்ப்புற மக்களுக்காகவும் பாலிங்கில் விவசாயிகள், மற்றும் மக்கள் நலனுக்காகப் போராடிய மாணவர்கள் எனப் போராட்டங்களை நிலைநிறுத்துவதில் அவர் முன்னணியில் உறுதியாக இருந்ததையும் அன்வார் சுட்டிக்காட்டினார். அரசியலில், 1990- ஆம் ஆண்டு முதல் 2003 வரை பார்ட்டி ராக்யாட் மலேசியாவின் (பிஆர்எம்) தலைவராகவும், பிகேஆரின் இணை நிறுவனர் மற்றும் துணைத் தலைவராகவும் முற்போக்கான மலேசியாவை உருவாக்க நீதியின் கொள்கைகளை வலுப்படுத்த உதவியதையும் அன்வார் நினைவு கூர்ந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!