Latestமலேசியா

ஏச்சு வாங்கியதால் ஆத்திரம்; மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைத்த ஆடவன்

பெட்டாலிங் ஜெயா, மே-23, ஆரா டாமான்சாராவில் ஏச்சு வாங்கியதால் ஆத்திரமடைந்த ஆடவன், மோட்டார் சைக்கிளையே தீ வைத்துக் கொளுத்தினான்.

அங்குள்ள மசூதி அருகே நேற்றிரவு அச்சம்பவம் நிகழ்ந்தது.

எரியூட்டப்பட்ட மோட்டார் சைக்கிளின் உரிமையாளரான 46 வயது ஆடவரிடம் இருந்து புகார் கிடைத்ததை, பெட்டாலிங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Shahrulnizam Jaafar உறுதிபடுத்தினார்.

தீ வைக்கப்பட்டதில் மோட்டார் சைக்கிள் முழுவதுமாக எரிந்துப் போன நிலையில், அதனருகில் இருந்த Perodua Myvi மற்றும் Axia என 2 கார்களும் சேதமுற்றதாக அவர் சொன்னார்.

ஏதோ ஒரு காரணத்திற்காக மோட்டார் சைக்கிளோட்டி அந்நபரை ஏசியிருக்கிறார்.

இதனால் கோபமுற்ற சந்தேக நபர் மோட்டார் சைக்கிளை காலால் எட்டி உதைத்ததோடு, lighter-ரைக் கொண்டு அதற்கும் தீயும் வைத்துள்ளான்.

எனினும் அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை.

தீ வைத்த ஆடவனும் அவனது இருப்பிடமும் அடையாளம் காணப்பட்டு விட்டது; ஆனால் அவன் இன்னும் கைதுச் செய்யப்படவில்லை என Shahrulnizam சொன்னார்.

குற்றவியல் சட்டம் 435-வது பிரிவின் கீழ் அச்சம்பவம் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!