Latestமலேசியா

திரங்கானுவில் அரைநிர்வாண ஆபாச நடன விழா; போலீஸ் பெர்மிட் இல்லை, ரிசோர்ட் நடத்துனருக்கு 25K ரிங்கிட் அபராதம்

குவாலா திரங்கானு, மே-23, திரங்கானுவில் உள்ள உல்லாசத் தலமொன்றில் அரைகுறை ஆடைகளுடன் ஆபாச நடனங்களுடன் கூடிய விழாவுக்கு போலீஸ் பெர்மிட் எதுவும் பெறப்படவில்லை.

அப்படியொரு நிகழ்வு நடைபெறப் போகும் தகவலே தங்களுக்குத் தெரியாது என குவாலா திரங்கானு மாவட்ட போலீஸ் தலைவர் Asisten Komisioner Azli Mohd Noor தெரிவித்தார்.

குவாலா நெரூஸ், Lang Tengah தீவில் உள்ள அந்த தனியார் ரிசோர்ட்டில் அப்படியொரு நிகழ்வு நடைபெற்றதைக் காட்டும் போஸ்டர்களும் வீடியோக்களும் வைரலாகியிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.

அந்நிகழ்வு குறித்து விளக்கம் பெறுவதற்காக அந்த ரிசோர்ட்டின் உரிமையாளர் அழைக்கப்படுவார் என, சுற்றுலா, பண்பாடு, சுற்றுச் சூழல், பருவநிலை மாற்றம் ஆகியவற்றுக்குப் பொறுப்பான மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் Datuk Razali Idris கூறியிருந்தார்.

பொழுதுபோக்கு, சுற்றுலா அல்லது பெர்மிட் விதிமீறல்கள் இருந்தது விசாரணையில் கண்டறியப்பட்டால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்திருந்தார்.

அவர் கூறியது போலவே, விசாரணைகள் முடிந்து, Summer Bay Resort நடத்துனருக்கு இன்று 25 ஆயிரம் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

Aloha Party என்றப் பெயரில் பெண்கள் அரை நிர்வாணமாக நடனமாடும் போஸ்டர்களும் படங்களும் செவ்வாக்கிழமை முதல் வைரலாகின.

அதுவும், திரங்கானுவில் இது போன்ற அரைநிர்வாண விழாக்களா என நெட்டிசன்களும் விளாசி வந்தனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!