Latestமலேசியா

UUM பல்கலைக்கழக மாணவி வினோஷினியின் 2ஆம் ஆண்டு நினைவு நாள்; மாணவர்கள் மெளன அஞ்சலி

கெடா, மே 23 – கெடா, சிந்தோக்கில் உள்ள UUM கெடா வடமலேசிய பல்கலைக்கழகத்தின் மாணவர் தங்கும் விடுதியில், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, மின்சாரம் தாக்கி உயிர் இழந்ததாக் கூறப்படும் முன்னாள் இளங்கலைப் பட்டதாரி எஸ். வினோஷினிக்கு அப்பல்கலைக்கழக மாணவர்கள் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்தினர்.

கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம் 21 ஆம் திகதி மரணமடைந்த அவருக்கு, அப்பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பல இன மாணவர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மெளன அஞ்சலி செலுத்தினர்.

வினோஷினிக்கு மரியாதைச் செலுத்தும் நோக்கிலும், பல்கலைக்கழக வளாகத்தின் பாதுகாப்பின் விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையிலும் இந்த மெளன அஞ்சலி மேற்கொள்ளப்பட்டது.

அதே சமயத்தில், வினோஷினிக்கு ஏற்பட்ட நிலைமை, இனி எந்த பல்கலைக்கழகத்திலும், எந்த ஒரு மாணவருக்கும் ஏற்படக்கூடாது என்பதே இவர்களின் நம்பிக்கையாகும்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!