Latestமலேசியா

ஒற்றுமை அரசாங்கம் தமிழ்ப் பள்ளிகளை ஒருபோதும் புறக்கணித்ததில்லை -சண்மூகம் மூக்கன்

கோலாலம்பூர், ஜூலை 3 – அண்மையக் காலத்தில் தமிழ்ப்ள்ளிகளின் கட்டிட விவகாரம் குறித்து எழுந்துள்ள பிரச்சனைகளை சில வேளைகளில் அதற்கு உடனடி தீர்வு காண்பது சற்று கடினமான காரியமாகும். 2012ஆம் ஆண்டின் சிறப்பு பணித்திட்டத்தின் கீழ் பல தமிழ்ப்பள்ளிகளின் கட்டிட வேலைகள் முன்னேற்கப்படும் போது பல காரணங்களால் அவை தடைப்பட்டன. எனினும் ஒற்றுமை அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மேற்பார்வையில் அவை ஒன்றன் பின் ஒன்றாக பரிசீலிக்கப்பட்டு உதவிகளும் மானியங்களும் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பல பள்ளிகளில் கட்டிடப் பிரச்சனைகள் கட்டம் கட்டமாக நிவர்த்தி செய்யப்பட்டு வருவதாக பிரதமரின் சிறப்புக் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

அந்த அடிப்படையில் ஈஜோக் தோட்ட தமிப் பள்ளியின் புதிய கட்டிட நிர்மாணிப்புக்கு பள்ளி மேலாளர் வாரியத்திற்கு கூடுதலாக 200,000 ரிங்கிட் நிதி வழங்கப்பட்டதை தொடர்ந்து அப்பள்ளியின் மேம்பாட்டுப் பணிகள் யாவும் நிறைவடைந்து கடந்த ஆண்டு செப்டம்பர் அப்பள்ளி செயல்படத் தொடங்கியது. இதே போன்று சிலாங்கூரில் சீபீல்ட் ( Seafield) தமிழ்ப்பள்ளி, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் சாகா (Sagga) தோட்ட தமிழ்ப்பள்ளி , பெர்தாங் ( Pertang) தமிழ்ப்பள்ளி மற்றும் பேராவில் ஹீவுட் (Heawood) தமிழ்ப்பள்ளி ஆகிய மூன்று பள்ளிகளும் இவ்வாண்டு மார்ச் முதல் இயங்கத் தொடங்கின. சிலாங்கூரில் பிராவுண்ஸ்டன் (Braunston) தமிழ்ப்பள்ளி பேராவில் ரெய்லா (Reyla) தமிழ்ப்பள்ளி ஆகியவையும் விரைவில் செயல்படுவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

ஒற்றுமை அரசாங்கம் எந்தவொரு பள்ளிகளையும் புறக்கணித்தது கிடையாது. தேசிய கல்வித் திட்டத்தில் தமிழ்ப்பள்ளிகளும் ஒரு அங்கம் என்பதால் பிரதமர் இந்திய மாணவர்களையும் நம் சேர்த்துத்தான் என்று கூறுகிறார். ஒரு சிலர் குறுகிய சிந்தனையாலும், அரசியல் இலாபங்களுக்ககாகவும் உண்மையை திரித்துக் கூறுகின்றனர். எனினும் உண்மையான சிக்கல்களை கண்டறிந்து அவற்றை சட்டப்பூர்வமாகவும் சிறப்பாகவும் செய்து முடிப்பதற்கு கால அவகாசம் தேவைப்படுவதாக சண்முகம் மூக்கன் வெளியிட்ட அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!