Latestமலேசியா

கடப்பிதழ், மைகார்ட் விநியோக நிறுவனமான டேதாசோனிக்கை அரசு கையகப்படுத்தாது – MKN விளக்கம்

புத்ராஜெயா, ஆகஸ்ட்-23 – மலேசியக் கடப்பிதழ் மற்றும் MyKad அடையாள அட்டைகளை விநியோகிக்கும் Datasonic Technologies Sdn Bhd நிறுவனத்தை அரசாங்கம் கையகப்படுத்தாது என தேசிய பாதுகாப்பு மன்றமான MKN தெளிவுபடுத்தியுள்ளது.

 

Datasonic நிறுவனத்தை சுமார் 7.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பீட்டில் அரசாங்கம் கையகப்படுத்த ஆலோசித்து வருவதாக வெளியான ஊடகத் தகவல்களைத் தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டது.

 

​குடிமக்களின் அடையாளத் தரவுகள் நாட்டின் மிக முக்கியமான வியூகச் சொத்துகளில் ஒன்று என்றும், அவற்றின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அரசு எப்போதும் முன்னுரிமை அளிக்கும் என்றும் MKN அறிக்கை வாயிலாகத் தெரிவித்தது.

 

அதே வேளை, அடையாள ஆவணச் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மையை உறுதிச் செய்வதற்கான யுக்திகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் எனவும் அது கூறிற்று.

 

​முன்னதாக, நிதி அமைச்சுடன் ஜூலை மாதம் நடைபெற்ற சந்திப்பின் அடிப்படையில் இந்த நிறுவனக் கையகப்படுத்தல் தொடர்பான மதிப்பீடு கோரப்பட்டதாக Datasonic-கின் தாய் நிறுவனமான NexG Bhd பங்குச்சந்தையில் தாக்கல் செய்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

 

​கடந்தாண்டு, 2032 வரை மலேசியக் கடப்பிதழ்கள் மற்றும் அடையாள அட்டைகளை விநியோகிப்பதற்காக 2.5 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான 6 ஆண்டு ஒப்பந்தங்களை Datasonic நிறுவனம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!