
குவா மூசாங், ஆகஸ்ட்.07-கிளந்தான், குவா மூசாங்கில் Kampung Pulai பகுதியில் உள்ள விடுதிக்கு அருகிலுள்ள குகையொன்றில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார்.
அச்சம்பவம் குறித்து நேற்றிரவு 9.42 மணியளவில் தங்களுக்கு அவசர அழைப்பு கிடைத்ததாக குவா முசாங் தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் நடவடிக்கைப் பிரிவு அதிகாரி Che Razak Harun தெரிவித்தார்.
அதனை அடுத்து அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் குகைக்குள் முதியவர் ஒருவர் சுயநினைவற்ற நிலையில் இருந்ததைக் கண்டனர்.
Stretcher மற்றும் விளக்கு உள்ளிட்ட உபகரணங்களின் உதவியுடன் அம்முதியவர் வெளியே கொண்டு வரப்பட்டார். அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதை சுகாதார அமைச்சின் அதிகாரி உறுதிப்படுத்தியதாக Che Razak Harun கூறினார்.
மீட்புப் பணியில் 13 பணியாளர்கள், இரண்டு தீயணைப்பு வாகனங்கள் மற்றும் இரண்டு Toyota Hilux வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இரவு 10.48 மணிக்கு அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தன.



